அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்துவந்தார். வெற்றியூர் கிராமத்தில் புதிதாகக் கட்டிவரும் வீட்டைப் பார்ப்பதற்காக மனைவி, இரண்டு மகள்கள், மூன்று பேரக்குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாத்தமங்கலம் அருகே செல்லும்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே ராமமூர்த்தி, அவரது மகள் நாகவள்ளி ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.