தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Perambalur Road Accident: ஒரே கிராமத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய கிராமம்! - three friends of trichy were killed

three friends killed in road accident: லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் மூவரும் உயிரிழந்த சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் மூவர் விபத்தில் உயிரிழப்பு
ஒரே ஊரை சேர்ந்த நண்பர்கள் மூவர் விபத்தில் உயிரிழப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 1:56 PM IST

பெரம்பலூர்:திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் லாரியும், இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரம்பலூர் அடுத்த பாடாலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் வினோத், ராமு மற்றும் ஆனந்த். நேற்று (அக். 22) இரவு நண்பர்கள் முவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் கோட்டாத்தூரில் இருந்து நக்கசேலம் வந்துள்ளனர். அப்போது பெரம்பலூர் - துறையூர் சாலையில் நக்கசேலம் அருகே வந்த போது இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் வினோத், மற்றும் ராமு ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆனந்த் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி கொண்டு செல்லப்பட்டுளார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: விளம்பரப் பலகை அமைக்கும் போது நேர்ந்த சோகம்... மின்சாரம் தாக்கி இருவர் பலி!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (அக். 23) ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஒரே கிராமத்தை சேர்ந்த நண்பர்களாய் வலம் வந்த மூன்று இளைஞர்கள் ஒரே நேரத்தில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: பட்டாக்கத்தியை காட்டி செல்போன், பணம் கொள்ளை; சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details