தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீண்டாமை வழக்கை வாபஸ் பெற மிரட்டல் - ஆட்சியரிடம் புகார்! - Perambalur

பெரம்பலூர்: தீண்டாமை வன்கொடுமை தடுப்பு வழக்கை வாபஸ் பெறுமாறு ஒரு பிரிவினர் தங்களை மிரட்டுவதாக, கீழ கணவாய் கிராமத்தில் வசித்து வரும் மற்றொரு பிரிவிவைச் சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த பொதுமக்கள்

By

Published : Apr 24, 2019, 2:57 PM IST

பெரம்பலூர் மாவட்டம் கீழ கணவாய் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரு பிரிவினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் ஒரு பிரிவினர், மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

அவர்களைத் தொடர்ந்த மற்றொரு பிரிவைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில்,

கடந்த 19ஆம் தேதி தங்கள் ஊரில் பெட்டிக் கடைக்கு சென்ற இளைஞர்களை, மற்றொரு தரப்பைச் சேர்ந்த சிலர் இரும்பு கம்பி மற்றும் முட்டுக்கட்டைகள் தாக்கியதோடு அநாகரிகமான சொற்களால் திட்டி உள்ளனர். இதனால் ஏற்பட்ட மோதலில் மற்றொரு தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், தாங்கள் அளித்த வழக்கை வாபஸ் பெறாவிட்டால் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் எனக்கூறி வழக்கில் உள்ள நபர்களின் ஆதரவாளர்கள் மிரட்டி வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேலும், கணவாய் கிராமத்தில் எண்ணிக்கை அளவில் சிறுபான்மையாக வசித்து வரும் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கி, இன்னல்கள் கொடுக்கும் மற்றொரு பிரிவைச் சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details