தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்: கொதிக்கும் விசிக! - பெரம்பலூர்

பெரம்பலூர்: இந்து மதத்திற்கு எதிராகப் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விசிகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.

threaten vck leader thiruma

By

Published : Nov 15, 2019, 7:56 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை பெரம்பலூர் மாவட்டம் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மிகவும் தரக்குறைவாக ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுக்கும் ஐந்து நிமிட வீடியோ இன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிஷா பார்த்திபனிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் விசிகவினர் புகார் அளித்தனர். இந்த புகாரில், ‘பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலூர் கிராமத்தில் வசிக்கும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த ராஜா என்பவருடைய மகன் டீசல் ராஜா என்பவர் தொல். திருமாவளவனை மிகவும் கேவலமாகவும், அவதூறாகவும் பேசி கொலை மிரட்டல் விடுத்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

விசிக தலைவர் தொல் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்

மேலும், மக்களவை உறுப்பினரான திருமாவளவன் பட்டியலினத்தவர் என்பதால் கீழ்த்தரமான எண்ணத்தில் அவரை மிரட்டி பேசியுள்ள டீசல் ராஜா என்பவரை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

கோரையாறு அருவிக்கு வழித்தடம் அமைக்கப்படுமா?

ABOUT THE AUTHOR

...view details