பெரம்பலூர்:வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை ஊராட்சியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அதே ஊரைச் சேர்ந்த கணபதி (54) கூடுதல் செயலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (அக்.16) காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு வங்கிக்கு வந்து உள்ளார். அப்போது வங்கியில் கணினி ஆபரேட்டரான கமலாதேவி பணிக்கு வரும்போது, வங்கியின் உள்ளே கணபதி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளார். உடனடியாக வங்கி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில், கணபதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்து உள்ளது. பின்னர், போலீசார் கணபதியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட கணபதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து அரும்பாவூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கடிச்சம்பாடி அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது குற்றாச்சட்டு!