பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்கு உட்பட்ட SKC நகரில் வசித்து வருபவர் பொன்னுச்சாமி. இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பணி நிமித்தமாக பொன்னுச்சாமி திருச்சிக்குச் சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட திருடர்கள் இவரது மனைவி அருகில் உள்ள கோயிலுக்கு சென்றபோது வீட்டிற்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தையும், ஐந்து பவுன் தங்க நகைகளையும் திருடிச் சென்றுவிட்டனர். கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய அவரது மனைவி வீட்டில் கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.