பெரம்பலூரை அடுத்துள்ள குரும்பலூர் பேரூராட்சியில் கீழ வீதியில் பள்ளிவாசல் அருகே குடியிருக்கும் ஜரீனா பேகம், கலாவதி, சரஸ்வதி, சாந்தா ஆகிய நான்கு பேர் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் பட்டப்பகலில் அடையாளம் தெரியாத மூன்று பெண்கள் பர்தாஅணிந்து திருடியுள்ளனர்.
அப்போது கலாவதி என்பவரது வீட்டில் திருட முயன்ற பெண்ணை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த உடன் இருந்த இரண்டு பெண்கள் ஜரீனா பேகம் என்பவரது வீட்டில் திருடிய 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணத்துடன் தப்பி ஓடி சென்றுள்ளனர்.