தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் திருட்டு! - Investigation by the Perambalur Police Department

பெரம்பலூர்: ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று இடங்களில் நடைபெற்ற திருட்டு சம்பவம்

By

Published : Oct 12, 2019, 8:55 AM IST

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.எம் நகரில் வசித்து வருபவர் செல்வகுமார். இவர் அனுக்கூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இதனிடையே பள்ளி முடித்துவிட்டு இன்று வீடு திரும்பிய செல்வகுமார், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டில் இருந்த பீரோவில் உள்ள 5 பவுன் நகையும், ரூபாய் 2 லட்சத்து 74 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

பெரம்பலூரில் மூன்று இடங்களில் கொள்ளை

இதேபோல், பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் வசித்து வரும் ராபர்ட் என்பவர் வெளியூர் சென்றவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பீரோவை உடைத்து 10 பவுன் நகையும் 33 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்து.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் நகர்ப்புற பகுதியில் நேற்று ஒரே நாளில் மட்டும் இருவேறு இடங்களில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசுப்பணி!

ABOUT THE AUTHOR

...view details