பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில் அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருக்கோயில் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இதனிடையே இக்கோயிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
'புதுசு புதுசா யோசிப்பானுங்க போல' - பெரம்பலூரில் புகழ்பெற்ற ஆலயத்தில் நடந்த கொள்ளை முயற்சி! - theft attempt at Perambalur
பெரம்பலூரில் உள்ள அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயிலில் நூதன முறையில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயிலின் கம்பி வலை மேற்கூரையைப் பிரித்து, உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உலோக சிலைகள் வைக்கப்பட்டிருந்த அறையானது கம்பி வேலியால் பாதுகாக்கப்பட்டிருந்ததால், கொள்ளையர்கள் உடைக்க முடியாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதனால் பல கோடி மதிப்புள்ள சிலைகள் தப்பியது. இச்சம்பவம் குறித்து மங்களமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களால் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்; டி.ஆர்.பாலுவின் ரியாக்ஷன்?