பெரம்பலூர் மாவட்டம் கல்பாடி கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மல்லிகா. இவர் நேற்று(அக்.9) வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள் மல்லிகாவை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த நகையை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், திருட்டில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம் சமயபுரம் பழைய மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் கார்த்திக், அண்ணா நகரைச் சேர்ந்த சாந்தி என்பது தெரியவந்தது.