பெரம்பலூர் மாவட்டம் கவுல் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பெரம்பலூரைச் சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி ஆகஸ்ட் 25ஆம் தேதி கடத்திச் சென்றார். இதனிடையே, சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது - Youth arrested in Pocso
பெரம்பலூர்: திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
புகாரின் அடிப்படையில் சிறுமியை கடத்திய இளைஞர் செல்வராஜை, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெரம்பலூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட சிறுமியை காவல்துறையினர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.