தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 3, 2021, 8:37 PM IST

ETV Bharat / state

'ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் மோடியிடம் அடமானம் வைத்துவிட்டார்' - திருமாவளவன் பேச்சு

பெரம்பலூர் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார்.

’’ஒட்டுமொத்த தமிழ்நாட்டையிம் மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்’’ - திருமாவளவன் பேச்சு
’’ஒட்டுமொத்த தமிழ்நாட்டையிம் மோடியிடம் அடமானம் வைத்து விட்டார்’’ - திருமாவளவன் பேச்சு

குன்னம் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கரை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் கிராமத்தில் வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'அதிமுக கூட்டணியைப்போல பேரத்தாலும் பணத்தாலும், அச்சுறுத்தலாலும் ஏற்பட்ட கூட்டணியல்ல இந்தக் கூட்டணி. கொள்கைக்காகவும், சமூக நீதியைப் பாதுகாப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட கூட்டணியாகும்.

அதிமுக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து அதிமுக அல்ல. அந்த அதிமுகவை மோடியிடம் அடமானம் வைத்து விட்டார், எடப்பாடி பழனிசாமி. அந்தக் கட்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அடமானம் வைத்து விட்டார். தமிழ்நாட்டை மீட்பதற்காக திமுக கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்.

அதிமுக தொண்டர்களுக்குப் போடும் ஒவ்வொரு வாக்கும் மோடிக்குத்தான் போய்ச்சேரும்.

மோடியும், அமித் ஷாவும் தமிழ்நாட்டை குறி வைத்துவிட்டார்கள். திமுகவா, பாஜகவா என்று தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக-வை எதிர்த்து நிற்கும் தகுதியை அதிமுக இழந்து விட்டது. அந்தக் கட்சி, அந்த அருகதையை இழந்து விட்டது. மேலும், 5 ஆண்டு காலம் மோடியும், அமித் ஷாவும் இந்த நாட்டை ஆண்டார்கள்.

அவர்களுக்குத் தமிழ் பிடிக்காது. தமிழ்நாடு எனும் அழகான பெயரை தக்ஷிணப்பிரதேசம் என்று மாற்றப்போவதாக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளனர்.

இன்று நாம் பேசும் தமிழ்மொழியை 25 ஆண்டுகளில் அழிப்போம் என்கிறார்கள். அவர்களுக்கு நாம் வாக்களிக்கக் கூடாது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நீ ஜெய்ச்சுருவ'- திமுக வேட்பாளரின் தலையில் திருநீறு அடித்த பூசாரி

ABOUT THE AUTHOR

...view details