சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியரை அவர்கள் முற்றுகையிட்டனர்.
குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யவில்லை - மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்! - குடிநீர் தேவை
பெரம்பலூர்: குடிநீர் தேவை நிவர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
frame saba
மேலும், இந்தப் பகுதியில் ஊராட்சி சார்பில் போடப்பட்டுள்ள அடிபம்பும் சரியாக வேலை செய்யாததால், குடிநீருக்காக பல கிலோமீட்டர் நடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பாத மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தைத் தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.