பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இந்நிலையில் சமூகநலத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பிற்பகலில் சாப்பிடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுக்கச் சென்றபோது, வாகனம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தியிருந்த வாகனம் அபேஸ்!
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊழியரின் இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்
பின்னர் இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த சிசிடிவி காணொளி காட்சிகளை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் காவல்துறையினர் நடமாட்டம் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே ஒருவரின் இருசக்கர வாகனம் காணாமல் போயிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.