பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 65). இவர் உடல் நிலை குறைவு காரணமாக நேற்று(ஆக.31) காலை உயிரிழந்தார்.
இந்நிலையில் இவரது மகன் பாலசுப்ரமணியன், தந்தையின் உடலை வீட்டிற்கு அருகிலே புதைக்க நேற்று மதியம் ஏற்பாடு செய்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் புதைக்க பாலசுப்ரமணியத்தின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இதுகுறித்து குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பாலசுப்ரமணியனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனிடையே காவல்துறையினர் சென்ற பிறகு பாலசுப்பிரமனியன், ராமசாமியின் உடலை இரவோடு இரவாக வீட்டிற்குள்ளேயே அமர்ந்த நிலையில் சமாதி கட்டிவுள்ளார்.
தந்தைக்கு வீட்டிலேயே சமாதி கட்டிய மகன் இச்சம்பவம் குறித்து பொதுமக்கள், காவல்துறையினருக்கு தெரிய வரவே, வருவாய் துறையினர் சமாதியை இடித்து, அதிலிருந்த சடலத்தை மீட்டு களரம்பட்டி இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
மேலும் தந்தையின் உடலை வீட்டிற்குள்ளேயே சமாதி கட்டியது தொடர்பாக பாலசுப்ரமணியனை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:லாரி ஓட்டுநர் வெட்டிக் கொலை - காவல் துறை விசாரணை!