தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணத்திற்காக பெற்ற தாயை கழுத்தறுத்துக் கொன்ற மகன் கைது

பெரம்பலூர்: பணத்திற்காக பெற்ற தாயை கழுத்தறுத்துக் கொன்ற மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

மகன் கைது
மகன் கைது

By

Published : Apr 15, 2021, 7:59 PM IST

பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கைலாசம்-சோலையம்மாள் (65) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். சோலையம்மாளின் மூத்த மகள் மலர்கொடி என்பவர் அரசுப் பணியின்போது உயிரிழந்தார்.

இதனால் சோலையம்மாளுக்கு அரசு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்தொகையைக் கேட்டு சோலையம்மாளின் கடைசி மகன் செல்வராஜ் தொந்தரவு செய்து வந்துள்ளார். ஆனால் பணத்தை சோலையம்மாள் தனது மகனிடம் கொடுக்கவில்லை.

இந்நிலையில், பெற்ற தாயை கழுத்தறுத்து அவரது மகன் செல்வராஜ் கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சோலையம்மாளின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தாயைக் கொலை செய்த மகன் செல்வராஜ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு: காதலியை கொன்று காதலன் தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details