தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்நாடகாவில் நிகழும் குழப்பத்திற்கு ராகுல் காந்திதான் காரணம் - தமிழிசை ! - சிறுவாச்சூர்

பெரம்பலூர் : கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும்தான் காரணம் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடகாவில் நிகழும் குழப்பத்திற்கு ராகுல் காந்தி தான் காரணம் - தமிழிசை அதிரடி!

By

Published : Jul 10, 2019, 6:12 PM IST

பெரம்பலூர், சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பாஜகவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அக்கட்சியின் கோட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கர்நாடகாவில் நிகழும் குழப்பத்திற்கு ராகுல் காந்தி தான் காரணம் - தமிழிசை அதிரடி!

இந்த கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கர்நாடகா மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும்தான் காரணம். ராகுல் காந்தி மீது ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். கர்நாடக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ராகுல் காந்தி மீது நம்பிக்கை இழந்ததன் காரணமாகத்தான், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் தமிழ் மொழியை திமுகதான் குத்தகை எடுத்து உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ABOUT THE AUTHOR

...view details