தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அடுத்தடுத்து ஒரே கிராமத்தில் தீ விபத்து - காவல்துறை விசாரணை

பெரம்பலூர் அடுத்து லாடபுரம் கிராமத்தில் இரு வேறு இடங்களில் நிகழ்ந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து ஒரே கிராமத்தில் தீ விபத்து-சதி வேலையா என போலீசார் விசாரணை
அடுத்தடுத்து ஒரே கிராமத்தில் தீ விபத்து-சதி வேலையா என போலீசார் விசாரணை

By

Published : Jul 11, 2022, 10:56 PM IST

பெரம்பலூர்: அடுத்து லாடபுரம் கிராமத்தில் வசிக்கும் கனகராஜ் என்பவருக்கு சொந்தமாக அம்மாபாளையம் செல்லும் வழியில் உள்ள வெங்காயம் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.

அதே கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் மனைவி வள்ளியம்மை என்பவருக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத பழைய குடிசை வீடு திடீரென தீப்பற்றி முற்றிலும் எரிந்து போனது.

அடுத்தடுத்து ஒரே கிராமத்தில் தீ விபத்து-சதி வேலையா என போலீசார் விசாரணை

கடந்த மாதம் இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்ட நிலையில் இருதரப்பு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தீ விபத்து பெரம்பலூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details