பெரம்பலூர்:பூலாம்பாடி பேரூராட்சியின் துணைத் தலைவராகவும் 7-வது வார்டு உறுப்பினராகவும் இருப்பவர் செல்வலட்சுமி. இந்நிலையில் இவரது வார்டு பொதுமக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்றும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை முறையாக நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து கேட்டால் முறையா பதில் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்த மக்கள், நாங்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்னதாகவே அவர் வெளியூருக்கு சென்று விட்டார் என தெரிவித்தனர். இதையடுத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் துணைத் தலைவர் செல்வலட்சுமி வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், பேரூராட்சி துணைத்தலைவருக்கு எதிராகவும் முழுக்கமிட்டனர்.