மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியி விவசாயிகள் 20 நாள்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் போராட்டங்களை அறிவித்து பல்வேறு இடங்களில் போராடுகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய விவசாய போராட்டக் குழு சார்பாக காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.
விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் இந்த போராட்டத்தில், அகில இந்திய விவசாய போராட்ட தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல் இந்த போராட்டம் ஓயப் போவதில்லை. அகில இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு இந்த போராட்டம் நடந்து வருகிறது.
இந்திய விவசாயிகளிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ள தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் பழனிசாமியும் இந்திய விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். வேளாண் சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தால் இந்த பேரழிவு ஏற்பட்டிருக்காது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: தமிழ்நாட்டில்தான் கடைசி