சமூக வலைதளங்களில் சாலை விதிகள் கடைப்பிடிப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை சினிமா பட பாணியில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் ஏற்படுத்திவருகின்றனர்.
இதனிடையே, பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்துகளின்போது உரிய நேரத்தில் உதவி செய்தவர்களுக்கு நன்றி செலுத்தும் நோக்கில் அவர்களின் புகைப்படம், பெயரோடு கூடிய பதாகைகளை நான்கு ரோடு பகுதி, ரோவர் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளன.