தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் தன்வந்திரி யாகம் - Thanavantri Yagam in the Perambalur Madanagopala Swamy Temple

பெரம்பலூர்: உலக மக்கள் கரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெற வேண்டிய தன்வந்திரி யாகம் நடைபெற்றது.

தன்வந்திரி யாகம்
தன்வந்திரி யாகம்

By

Published : Mar 25, 2020, 7:57 AM IST

கரோனா வைரஸ் எதிரொலி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனிடையே பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயிலில், நேற்று திருச்சி மண்டல இணை ஆணையர் உத்தரவுப்படியும், அரியலூர் உதவி ஆணையர் கருணாநிதி அறிவுரைப்படியும், உலக மக்கள் கரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெற வேண்டி தன்வந்திரி யாகம் நடைபெற்றது.

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் தன்வந்திரி யாகம் நடைபெறும் காட்சி

இந்த தன்வந்திரி யாகத்தில் பல்வேறு மூலிகை பொருள்கள் செலுத்தப்பட்டு, தீபாரதனை நடைபெற்றது. இதில், திருக்கோயில் பட்டாச்சாரியர், கோயில் அலுவலர்கள், செயல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details