பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் நெற்குணம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் புரட்டாசி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
பெரம்பலூர் அருகே கோயில் உண்டியல் திருட்டு! - அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோவில்
பெரம்பலூர் அருகே உள்ள கோயில் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உண்டியலை திருடிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை புரட்டாசி மாத பிறப்பையொட்டி கோயிலை திறந்து பார்த்தபோது உண்டியல் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து களத்தூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்படது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவியை ஆய்வு செய்தனர். ஆய்வில் நேற்று (செப்.16) இரவு கோயிலில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கோயில் உண்டியலை திருடிச் செல்வது தெரிந்தது. மேலும் அந்த உண்டியலில் ரூபாய். 20,000 பணம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குமரியில் அம்மன் சிலையிலிருந்த 17 சவரன் நகை திருட்டு
!