தமிழ்நாட்டில் கரோனோ பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், வெளிமாநிலங்களிலிருந்து மது பாட்டில்களை சட்டவிரோதமாக எடுத்துவந்து, அவற்றை அதிக விலைக்கு விற்பதைத் தடுக்கும் வகையில், காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெரம்பலூர், ஆத்தூர் சாலையில் உள்ள ஜமாலியா நகரில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாகக் காவல் துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி அப்பகுதிக்குச் சென்று விசாரித்தனர்.
இதில் அப்பகுதியில் தீபக் என்ற பெயரில் தேநீர்க்கடை நடத்திவரும் சுந்தர்ராஜன் என்பவர் கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மதுபான பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து பெரம்பலூர் நகரக் காவல் துறையினர் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 16 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து, சுந்தர்ராஜனை கைதுசெய்து, பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.