பெரம்பலூர் அருகே நக்கசேலம் பகுதியில் டாஸ்மாக் கடையில், அருகிலுள்ள அடைக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மதுபோதையில் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வந்த பார் உரிமையாளர் செல்வராஜ் என்பவரை, தகராறில் ஈடுபட்டவர்கள் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர்.
இதனால் பார் உரிமையாளர் செல்வராஜ் தலை, கையில் காயம் ஏற்பட்டது. மேலும் பாரில் வேலை செய்தவர்களையும் தாக்க முயன்ற கும்பல் பாரின் மேற்கூரையையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.