பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனோ தொற்று சிகிச்சைக்காக அமெரிக்கா வாழ் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.8.85 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் உஷாசந்திரன், இந்தியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம், இந்தியாவிற்கான தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் ராஜரத்தினம், செயல் இயக்குநர் இளங்கோ ஆகியோர் மூலம் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வாழ் தமிழ் சங்கம் சார்பில் கரோனா உதவிக்கரம் இதில் ஆக்ஸிஜன் செலுத்தும் குழாய்கள், ஆக்ஸிஜன் அடர்த்தியினை அதிகப்படுத்தும் முகக் கவசங்கள், ஆக்ஸிஜன் செலுத்து மீட்டர், உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழகப்பட்டன.
அமெரிக்க வாழ் தமிழ் சங்கம் சார்பில் கரோனா உதவிக்கரம் இதனை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா, பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலையில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜா பெற்றுக்கொண்டார்.