தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாண் சட்டங்களை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்! - perambalur bsp protest

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சியினர் இன்று பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

bsp protest against agri laws
வேளாண் சட்டங்களை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம்

By

Published : Nov 2, 2020, 6:40 PM IST

பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியினர் சார்பில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச்சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வேளாண் திருத்தச் சட்டங்கள், புதிய கல்விக்கொள்கை உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இதையும் படிங்க:சமாஜ்வாதியை வீழ்த்த பாஜக பக்கம் சாய்கிறாரா மாயாவதி?

ABOUT THE AUTHOR

...view details