தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேர்தல் நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது சந்தர்பவாதம்' - கே.எஸ் அழகிரி

திருச்சி: தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன்களை தேர்தல் நேரத்தில் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் கூறியிருப்பது சந்தர்பவாதம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Congress president KS Alagiri
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி

By

Published : Feb 7, 2021, 7:02 AM IST

திருச்சி மாவட்டம் முசிறியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது. ஏர் கலப்பை பேரணியில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் வழியாக சென்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது, ’விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர் கடன்களை 110 விதியின் கீழ் தள்ளுபடி செய்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் கூறியிருப்பது சந்தர்பவாதம். வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக எதிர்க்கட்சி தலைவர் கூறியதும் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக செயல்படுத்தியிருப்பது ஒரு அப்பட்டமான சந்தர்பவாதம்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி

தமிழ்நாடு அரசு விவசாயிகள் மேல் அக்கறை இருந்து இருந்தால் விவசாயிகள் கடன் சுமையால் துவண்டபோது அதனை தள்ளுபடி செய்து இருக்க வேண்டும். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு ஏற்புடையதல்ல’ என்றார்.

இதையும் படிங்க:வேளாண் சட்டங்களை ரத்து செய்க - அண்ணா சாலையில் திடீர் சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details