பெரம்பலூர்:தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் வேளாண் சட்டங்கள் குறித்த நன்மைகளை விளக்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பெரம்பலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து கட்சியின் தேசியத் தலைமை கூடிய விரைவில் அறிவிக்கும். தமிழ்நாடு அரசு வேல் யாத்திரையை எதற்காக தடுத்தது என்று தெரியவில்லை. வேல் யாத்திரை மூலம் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டு, தமிழ்நாடு மக்களிடையே வரவேற்பை பெற்றது. தடைகள் பல வந்தாலும் யாத்திரையை தொடர்ந்தோம்.