தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலுாரில் கோடைக் கால பயிற்சி முகாம் ஆரம்பம்! - Perambalur

பெரம்பலுார்: கோடை விடுமுறையை முன்னிட்டு, கோடைக் கால பயிற்சி முகாம் டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் தொடங்கப்பட்டது. இதில் நுாற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

summer training class

By

Published : May 3, 2019, 10:50 AM IST

Updated : May 3, 2019, 12:18 PM IST

கோடைகாலம் தொடங்கியதையொட்டி பல்வேறு இடங்களில் கோடைக் கால பயிற்சி முகாம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பெரம்பலுார் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டுத் துறை சார்பில் கோடைக்கால பயிற்சி முகாம் இன்று தொடங்கப்பட்டது.

டாக்டர் எம்ஜிஆர் நினைவு விளையாட்டு மைதானத்தில் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டு பயிற்சி முகாம் வருகின்ற மே 18ஆம் தேதி வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சி முகாமில் தடகளப் போட்டிகள், கால்பந்து, கபடி, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இதில் மாணவர்களுக்கான அடிப்படையான ஓட்டம், ஆசனப் பயிற்சிகள் உள்ளிட்ட பலவகை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இந்த விளையாட்டுகளுக்கான பயிற்சியை பெரம்பலுார் மாவட்ட தடகளப் பயிற்சியாளர் கோகிலா மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார். இந்தக் கோடைக் கால பயிற்சி முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Last Updated : May 3, 2019, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details