தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15ஆம் தேதி முதல் எறையூர் சர்க்கரை ஆலையில் அரவை பணிகள் தொடக்கம்! - பெரம்பலூர் சர்க்கரை ஆலை

பெரம்பலூர்: எறையூர் சர்க்கரை ஆலையில் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி அறவை பணி தொடக்கப்படுவதால் ரூ. 1.75 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

sugarcane slash mill
sugarcane mill

By

Published : Dec 13, 2019, 1:44 PM IST

பெரம்பலூர் மாவட்டம் எறையூரில் உள்ள பொதுத் துறை நிறுவனமான சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் அரவை பணிக்காக ஆலையின் பாய்லர் உள்ளிட்ட அரவை உபகரணங்களை தயார் செய்யும் பணி கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 7ஆம் தேதி அன்று அரவை பணி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவித்தபடி அன்று அரவை பணிகள் தொடங்கவில்லை.

பெரம்பலூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த கன மழையால் கரும்பு வயல்களில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் மழையால் சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் பெரும்பாலான விவசாயிகளால் கரும்புகளை வெட்டி சர்க்கரை ஆலைக்கு எடுத்து வர முடியாத சூழல் இருந்தது.

எறையூர் சர்க்கரை ஆலை

இதனிடையே அரவை பணியை ஒத்தி வைக்குமாறு சர்க்கரை துறை ஆணையரிடம் கரும்பு விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து அரவை பணி டிசம்பர் 15ஆம் தேதி பணி தொடங்கப்படும் என சர்க்கரை ஆலை நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் அரவை பணி தொடங்கப்படுவதால் ரூ. 1.75 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இயற்கை அன்னைக்கு என்ன தரப்போகிறோம்?

ABOUT THE AUTHOR

...view details