தமிழ்நாடு

tamil nadu

நிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் கோரிக்கை!

By

Published : Nov 21, 2020, 10:14 PM IST

பெரம்பலூர்: கரும்பு வெட்டியதற்கான நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி முதலமைச்சர் வருகையின் போது விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றம்.

Sugarcane farmers demand payment of arrears!
Sugarcane farmers demand payment of arrears!

பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சர்க்கரை ஆலை பகுதியில் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது 2015- 16 மற்றும் 2016-17 ஆம் ஆண்டுக்கும், அதன் பிறகு வெட்டிய கரும்புக்கும், மாநில அரசு தர வேண்டிய பாக்கித் தொகை SAP ரூ. 33 கோடியை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விவசாயிகளுக்கு ஒரே தவணையில் வழங்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் பெரம்பலூர் வரும் போதும், ஆலை அரவை தொடங்கும் போதும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக ஆலை வளாகத்தில் மாலையில் நடைபெற்ற முன்மாதிரி பேரவைக் கூட்டத்தை அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒகேனக்கல்லில் முகக்கவசம் அணியாத சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிப்பு

ABOUT THE AUTHOR

...view details