தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரும்பு நிலுவைத் தொகை வழங்காத ஆலையைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் - கரும்பு நிலுவைத் தொகை வழங்காத ஆலையைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்: நிலுவைத் தொகையை வழங்காத சர்க்கரை ஆலையைக் கண்டித்து கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம், Sugarcane farmers boycott
Sugarcane farmers

By

Published : Dec 6, 2019, 8:07 AM IST

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரம்பலூர் மாவட்டம் இறையூர் சர்க்கரை ஆலை 42ஆவது வருடாந்திர பங்குதாரர்கள் கூட்டம் நடைபெற்றது. சர்க்கரை ஆலை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ரீட்டா ஹரிஷ் தக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த பங்குதாரர் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, சர்க்கரை ஆலை அலுவலர்கள், கரும்பு விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாகம் 2015-16, 2016-17 ஆகிய ஆண்டு பருவங்களுக்கான கரும்பு வெட்டி அனுப்பிய நிலுவைத் தொகையாக ரூ. 39 கோடி வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். 2019-20ஆம் ஆண்டுக்கான கரும்பு விலையை டன்னுக்கு ரூபாய் நான்காயிரம் அரசின் பரிந்துரை விலையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்தனர்.

கூட்டத்தை புறக்கணித்த கரும்பு விவசாயிகள்

மேலும், அரசு கரும்புக்கான பரிந்துரை விலையை அறிவிக்காமல் மத்திய அரசு வருவாய் பங்கீட்டு முறையை கடைபிடிக்க சர்க்கரை ஆலைகள் நிர்பந்திக்கப்படுவதால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை என தெரிவித்த விவசாயிகள் ஆலையில் இணை மின் திட்டத்திற்கு தங்களிடம் பெறப்பட்ட பணத்திற்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் பங்கு பத்திரமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றனர்.

கூட்டத்தை புறக்கணித்த கரும்பு விவசாயிகள்

அரவை பருவத்தில் மட்டும் மின் உற்பத்தி செய்யும் நிலையை மாற்றி ஆண்டு முழுவதும் மின் உற்பத்தியை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் கரும்பு விவசாயிகள் இந்தக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் கூட்டம் நடைபெறும் வளாகத்திற்கு வெளியே விவசாயிகள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

...view details