தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் தொல்லை வழக்கில் மாணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை! - Student Sexual harassment at perambur

பெரம்பலூர்: வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவன் கருப்பையா

By

Published : Oct 4, 2019, 7:03 PM IST

Updated : Oct 5, 2019, 7:53 AM IST

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்ற கல்லூரி மாணவர் அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

இதனிடையே, பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட கருப்பையாவிற்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கருப்பையா திருச்சி மத்திய சிறைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

இதையும் படிக்க: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

Last Updated : Oct 5, 2019, 7:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details