தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எச்ஐவி பாதித்த மாணவனை அனுமதிக்க மறுக்கும் பள்ளி! - Relatives protest

பெரம்பலூர்: எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மாணவனை அனுமதிக்க மறுக்கும் அரசு பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எச்ஐவி பாதித்த மாணவனை அனுமதிக்க மறுக்கும் பள்ளி!

By

Published : Jul 10, 2019, 9:36 PM IST


பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொளக்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி எச்ஐவியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மாணவன் விஜய்யின் அப்பாவிற்கும், விஜய்க்கும் எச்ஐவி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, மாணவன் விஜய் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டு வருகிறார்.

மேலும் அவர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மேல்நிலைப்பள்ளி கொளக்காநத்தம் படித்துள்ளார். விஜய்யின் தாய் இறந்துவிடவே ஒரு வருடம் பெரம்பலூர் அரசு பள்ளியில் படித்து வருகிறார்.

எச்ஐவி பாதித்த மாணவனை அனுமதிக்க மறுக்கும் பள்ளி!

இந்நிலையில் எச்ஐவி மருந்து உட்கொள்கின்ற காரணத்திற்காக மாணவன் விஜய்யை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனுமதிக்க மறுத்து விட்டதாகவும் அதைக் கேட்க வந்த அவரது உறவினர்களை, ஆசிரியர்கள் தகாத வார்த்தை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details