தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரவுடிசம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பெரம்பலூர் எஸ்.பி., எச்சரிக்கை - காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன்

பெரம்பலூர்: ரவுடிசம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரம்பலூர் எஸ்.பி.,
பெரம்பலூர் எஸ்.பி.,

By

Published : Nov 17, 2020, 6:53 PM IST

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் காவல்துறையினரின் அணிவகுப்பு பேரணி இன்று (நவம்பர் 17) நடைபெற்றது. பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் நடைபெற்ற காவல்துறையினரின் இந்த பேரணியை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இந்த பேரணியில் அதிவிரைவு படை வீரர்கள் உள்ளிட்ட காவலர்கள் அணிவகுத்து வந்தனர். இறுதியாக, கலவர தடுப்பு ஒத்திகை, போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை ஒத்திகை உள்ளிட்ட நிகழ்வுகளை பாலக்கரை பகுதியில் அதிவிரைவு படையினர் மேற்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், பெரம்பலூர் மாவட்டத்தில் ரவுடிசம், கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது என்றும் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details