தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

4 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்று சாதனைப் படைத்த மாணவிகள்! - சாதனை

பெரம்பலூர்: மாநில அளவிலான இளையோர் தடகளப் போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகள் 4 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.

state level winners

By

Published : Oct 9, 2019, 11:37 PM IST

மாநில அளவிலான இளையோர்களுக்கான தடகளப் போட்டிகள் ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் பெரம்பலூர் விளையாட்டு விடுதி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். அவர்கள் குறித்த விவரங்கள்,

  • 16 வயதுக்கு உட்பட்ட நடைப் போட்டியில் சுபாஷினி என்ற மாணவி தங்கம் வென்றுள்ளார்.
  • 18 வயதுக்கு உட்பட்ட 1500 மீ ஓட்டப் போட்டியில் கிருத்திகா என்ற மாணவி தங்கம் வாங்கியுள்ளார்.
  • ஈட்டி எறிதலில் பிரியதர்ஷினி என்ற மாணவி தங்கம் பெற்றுள்ளார்.
  • சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் கார் குழலி என்ற மாணவி தங்கம் வென்றுள்ளார்.
  • ஆரோக்கியா எபோசியா டெல்சி என்ற மாணவி 800 மீ ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வாங்கியுள்ளார்.
  • 20 வயதுக்குட்பட்ட 4x400 மீ தொடர் ஓட்டப் போட்டியில் பவானி என்ற மாணவி வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.
  • சங்கீதா என்ற மாணவி ஹெப்த லான் என்ற போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.
    சாதனைப் படைத்த மாணவிகள்!

பதக்கங்கள் வென்ற மாணவிகளை தடகளப் பயிற்சியாளர் கோகிலா மற்றும் பலர் வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 4ஆவது நாளை எட்டிய போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் - பொதுமக்கள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details