பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளே இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் இந்திரகுமார் (30). இவர் இரவு காட்சி சினிமாவுக்கு சென்றுவிட்டு ரோவர் வளைவு பகுதியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். காலையில் பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் தற்கொலை - srilanka refugee sucide at friend home at perumbalur
பெரம்பலூர்: இலங்கை அகதி ஒருவர் நண்பர் வீட்டில் தங்கியபோது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அகதி முகாம் இளைஞர் தற்கொலை
இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து இந்திரகுமார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:திருமணம் மீறிய உறவால் இருவர் தற்கொலை!