தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா - அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் இளைஞர் விளையாட்டு திட்ட போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்.

Sports Equipment Supply Ceremony on behalf of the Sports Development Department
விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

By

Published : Jan 15, 2020, 7:24 PM IST


பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் செட்டிகுளத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு கைப்பந்து, கிரிக்கெட் மற்றும் கபடி உள்ளிட்ட போட்டிகளில் பங்கு பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா

தொடர்ந்து கபடி கிரிக்கெட் மற்றும் கைப்பந்து உள்ளிட்ட போட்டிகளையும் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தது அங்குள்ள விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தியது

இந்த நிகழ்வில் திட்ட இயக்குனர் மற்றும் விளையாட்டு விடுதி அலுவலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் , வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details