தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு ரத்து - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - madras high court

பெரம்பலூரில் தலைமைக் காவலராக சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு வழங்கிய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு- உயர்நீதிமன்றம் உத்தரவு!
சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வு- உயர்நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Jan 18, 2023, 8:09 PM IST

சென்னை மாவட்டத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த ராமசாமி என்பவர், 25 ஆண்டுகள் காவல் துறையில் பணியாற்றிய தனக்கு சிறப்பு எஸ்.ஐ ஆக பதவி உயர்வு வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ராமசாமிக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும், காவல் துறையும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

அந்த மனுவில், 1979-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராகப் பணி நியமனம் பெற்ற ராமசாமி, 1997-ம் ஆண்டு முதல் நிலை காவலராகவும், 2002-ம் ஆண்டு தலைமைக் காவலராகவும் பணியாற்றி 2009-ல் பணி ஓய்வு பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு, சிறப்பு எஸ்.ஐ. பதவி உயர்வுக்கு 10 ஆண்டுகள் தலைமைக் காவலராக பணி புரிந்திருக்க வேண்டும் என முழு அமர்வு உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, ஏழு ஆண்டுகள் மட்டுமே தலைமைக் காவலராக பணியாற்றிய மனுதாரருக்கு பதவி உயர்வு பெற உரிமையில்லை எனக் கூறி, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதையும் படிங்க:இளைஞரை காளை முட்டி தூக்கி வீசிய வீடியோ; தருமபுரி 'எருதுவிடும் விழா'வில் நடந்த சோகம்

ABOUT THE AUTHOR

...view details