பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் அருகே உள்ள தேவேந்திரகுல தெருவில் வசித்தவர்கள் ராமசாமி-செல்லம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட ரமேஷ் என்ற ஒரு மகன் உள்ளார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டதால் ரமேஷின் மனைவி தங்கமணி தனது குழந்தைகளோடு தனியாக வசித்துவருகிறார்.
ஒவ்வொரு நாளும் மாமனார், மாமியாரை பார்த்து விட்டுச் செல்வது தங்கமணிக்கு வழக்கம். இந்நிலையில், அவர் இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மாமனாரும், மாமியாரும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.