தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை என அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கவுள்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாளை பள்ளி திறப்புக்காக இன்று வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரு வகுப்பறைக்குள் நல்ல பாம்பு இருந்ததை கண்டு தலைமையாசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.