தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரம்பலூரில் சின்ன வெங்காயம் தொடர் திருட்டு - அச்சத்தில் விவசாயிகள்...! - Alathur small onion theft

பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அடையாளம் தெரியாத நபர்கள் சின்ன வெங்காயத்தை திருடியிருப்பது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Alathur small onion theft
Alathur small onion theft

By

Published : Dec 17, 2019, 8:41 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிகளவில் பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தை எட்டியுள்ளது.

இதனிடையே, பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள இரூர் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில் செல்வராஜ் வயலில் பயிரிட்டிருந்த சின்ன வெங்காயத்தில் 400 கிலோவை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து பாடாலூர் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்ன வெங்காயம் திருடபட்ட விவசாய நிலம்

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் சின்ன வெங்காயம் மூன்றாவது முறையாக திருடப்பட்டிருப்பது விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

மயிலாடுதுறையில் 60 கிலோ வெங்காயம் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details