தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு! - Government hospital

பெரம்பலூர்: குளத்தில் மூழ்கி உயிரிழந்த 13 வயது சிறுவனின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ரனர்.

சிறுவன் உயிரிழப்பு
சிறுவன் உயிரிழப்பு

By

Published : Sep 24, 2020, 11:48 AM IST

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகுவேல் என்பவரின் மகன் தினேஷ். இவர் நேற்று(செப் 23) மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து உறவினர்கள் அவரை தேடியபொழுது அதே ஊரில் உள்ள விஏஒ அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள குளத்தின் கரையில் தினேஷ் உடைகள் கிடந்துள்ளது, இதனால் சந்தேகமடைந்து குளத்திற்குள் தேடியபோது தினேஷ் குளத்தில் மூழ்கி இறந்துகிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இறந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்ட பின்னர் உடற்கூறாய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கோவையில் இன்று 595 பேருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details