பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த பணியாளர்களாக தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஊதிய உயர்வு கோரி தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் - Cleaners demanding salary hike
பெரம்பலூர்: ஊதிய உயர்வு கோரி தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்
இந்தப் பணியாளர்கள் காலை முதல் மாலை வரை தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்தாலும், குறைந்த கூலியே வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஊதியத்தை உயர்த்த வலியுறுத்தியும், பணி நிரந்தரம் செய்யக் கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக இ.கம்யூனிஸ்ட் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்