பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகையிட்டனர்.
வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக ஏமாற்றிய கும்பல்: பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு! - வேலை வாங்கி தருவதாக மோசடி
பெரம்பலூர்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக, பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெரம்பலூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், தவமணி, கலையரசன் ஆகிய மூன்று பேர் சேர்ந்து; அதே ஊரைச் சேர்ந்த இளங்கோவன், செல்வராஜ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.25 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, கடந்த 3 ஆண்டுகளாக வேலை பெற்றுத்தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் மனு அளித்தனர்.