தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடைவீதி உரிமையாளர்களுக்கு கரோனா: கடைகள் அடைப்பு - கடைகள் அடைப்பு

பெரம்பலூர்: நகர்ப்புற கடைவீதி உரிமையாளர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டன.

கடைகள் அடைப்பு
கடைகள் அடைப்பு

By

Published : Aug 11, 2020, 5:33 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 718ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், நகர்ப்புற பகுதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி பகுதியில் கடை உரிமையாளர்களில் பலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நகரில் இயங்கும் பெரியகடை வீதி, தபால் நிலைய கடைவீதி பகுதி, காமராஜர் வளைவு கடைவீதி பகுதி உள்ளிட்ட கடைவீதி பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 718 ஆகும். அதில், 482 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 227, சிகிச்சை பலனின்றி இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details