தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிவேகமாக சென்ற ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து...! - விபத்து

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அதிவேகமாக சென்ற ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஷேர் ஆட்டோ

By

Published : Apr 22, 2019, 7:15 AM IST

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டி சிறுவர் பூங்கா ஒன்று இயங்கி வருகிறது. நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோர் சிறுவர் பூங்காவில் கூடியிருந்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையிலிருந்து பெரம்பலூர் பாலக்கரை பகுதியை நோக்கி அதிவேகமாக ஷேர் ஆட்டோ ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.

ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து

அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக சாலையின் இடதுபுறத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். உடனே இதை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி சொல்லப்போவது அதிவேகமாக செல்வதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் எனவே காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details