பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது ஓட்டு வீட்டில் வெங்கடேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு வசித்துவருகிறார்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால், வெங்கடேசன் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது.