விவசாயத்தை முதன்மையாகக் கொண்டது பெரம்பலூர் மாவட்டம். இம்மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் சுமார் 70க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியானது, தூர்வாரப்படாமல் இருந்தது.
ரூ.26 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் தொடக்கம் - 26 லட்சம் ரூபாய்
பெரம்பலூர்: குடிமராமத்து திட்டத்தின் கீழ் செங்குன்றம் ஏரி, வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் ரூபாய் 26 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் செங்குணம் பெரிய ஏரி தூர்வாருவதல், வரத்து வாய்க்கால் சரி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 26 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது வரத்து வாய்க்கால்களில் உள்ள கருவேலம் பூக்கள் அகற்றப்பட்டு பக்கவாட்டுப் பகுதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஏரியின் தண்ணீர் வெளியேற்று பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படுவதன் மூலம் விவசாய நிலங்கள் பயன் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.